Home / ஆரோக்கியம் / ஆண்கள் கிரீன் டீ குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா……

ஆண்கள் கிரீன் டீ குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா……

நாம் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பது அன்றாட பழக்கமாக மாறி விட்டது. ஒரு சிலருக்கு இந்த காலை பழக்கம் இருப்பதில்லை. ஆனால், காலையில் காபி (அ) டீ குடிக்கும் இந்த பழக்கம் உங்களுக்கு முழு பலனை தர வேண்டுமென்றால் அதற்கு கிரீன் தான் சரியான தேர்வு.

குறிப்பாக ஆண்கள் கிரீன் டீயை குடிப்பதால் புற்றுநோய் முதல் பிறப்புறுப்பு பிரச்சினைகள் வரை பலவித வழிகளில் இது உதவும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். வாங்க, எப்படி கிரீன் டீ ஆண்களை பலவித நோய்களில் இருந்து காக்கிறது என்று இனி அறிவோம்

உடல் எடை கூடுதல், புற்றுநோய், இதய கோளாறுகள் போன்ற ஏராளமான வியாதிகளுக்கு இந்த கிரீன் டீ அருமையான மருந்தாக உள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படுகின்ற பல வித பிரச்சினைகளுக்கு இது தீர்வை தரவல்லது. எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலமாக்க கிரீன் டீ சிறந்த ஆயுதம்.

உடல் அடிக்கடி சோர்வு அடிந்தால் இனி உங்களுக்கான வைத்தியம் 1 கப் கிரீன் டீ தான். மூளையின் ஆற்றலை சுறுசுறுப்பாகவும், உடலுறவின் போது அதிக செயல்திறனுடன் இருக்க கிரீன் டீ உங்களுக்கு உதவுகிறது. மேலும், நீண்ட நேரம் எந்த வேளையில் ஈடுபட வேண்டுமென்றாலும் 1 கப் கிரீன் டீ ஆண்களுக்கு போதும்.

ஆண்களின் பெரிய பிரச்சினையாக இந்த மலட்டு தன்மை பார்க்கப்படுகிறது. பலர் தாம்பத்திய வாழ்வில் இந்த மலட்டு தன்மை பிரச்சினை மிக மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளது. மலட்டு தன்மையை தடுக்க இந்த கிரீன் டீ உதவும் என சில ஆய்வுகள் சொல்கிறது.

ஆண்களின் உடல் முழுவதும் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய இந்த கிரீன் டீ ஒரு அற்புத மருந்தாக வேலை செய்கிறது. 5,000 வருடத்திற்கு முன்பு இருந்தே ஆசிய நாடுகளில் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்காக இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆண்களே, நீங்கள் சீக்கிரமாகவே முதுமையான தோற்றத்தை அடைந்து விடுகிண்றீர்கள் என்றால் உங்களுக்கான தீர்வு கிரீன் டீ தான். செல்கள் சிதைவடைவதை தடுத்து வயதாகாமல் தடுக்கிறது. மேலும், முகத்தின் பொலிவையும் இது இரட்டிப்பாக செய்கிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

பல் சொத்தை சரியாக்குவதற்கும் வராமல் தடுப்பதற்கும் அற்புதமான இயற்கை முறை

பற்சொத்தை ஒரு சாதாரணமான விஷயம் கிடையாது. இதனால் ஏற்படும் வலி உங்கள் நாள்களை மிகவும் கஷ்டமாக்கி விடும். நீங்கள் பல் ...

%d bloggers like this: