Home / உலகச் செய்திகள் / ஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் கடத்தல்

ஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் கடத்தல்

ஆஃபிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் டான்சானியாவின் முக்கிய நகரமான டர் எஸ் சலாமில் கடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு வயது 43.

மொஹமத் டஹ்ஜி எதற்காக கடத்தப்பட்டார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

டஹ்ஜியின் சொத்து மதிப்பு 1.5 பில்லியல் டாலர்கள் என குறிப்பிட்டிருந்த ஃபோர்ப்ஸ் பத்திரிகை, டான்சானியாவின் ஒரே கோடீஸ்வரர் இவர்தான் என விவரித்திருந்தது. 2017ஆம் ஆண்டு அறிக்கையில், ஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் மொஹமத் டஹ்ஜி என்று கூறப்பட்டது.

About இனியவன்

x

Check Also

அமெரிக்கா முதல் தமிழகம் வரை #MeToo

#MeToo Related

%d bloggers like this: