Home / விளையாட்டுச் செய்திகள் / அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (11ஆம் திகதி) நடைபெறவுள்ளது.

பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் லீக் சுற்றில் இரு அணிகளும் மோதியதில், அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதேவேளை, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் ஒருநாள் போட்டியில் 5 000 ஓட்டங்களைக் கடப்பதற்கு மேலும் 19 ஓட்டங்களே தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், மிட்சல் ஸ்டாரக், இன்று மேலும் 2 விக்கெட்களைக் கைப்பற்றுவாராயின் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 50 விக்கெட்களைக் கைப்பற்றிய வீரராகப் பதிவாகுவார்.

இரு அணிகளும் இதுவரை 148 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ளதுடன், இதில் 82 போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளதுடன் 61 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இங்கிலாந்து இதுவரை 3 சந்தர்ப்பங்களில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றபோதிலும் ஒரு தடவையேனும் கிண்ணத்தை கைப்பற்றவில்லை.

இதேவேளை, 7 தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 5 தடவைகள் கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தெற்காசிய விளையாட்டில் இலங்கை அணி மூன்று தங்கம்

நேபாளத்தின் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழா (SAG) போட்டிகளின் முதல் நாளான நேற்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான ...

%d bloggers like this: