Home / சினிமா செய்திகள் / அமெரிக்காவில் கிராமி விருது நிகழ்ச்சியில் மகளுடன் பங்கேற்ற ஏ.ஆர். ரஹ்மான்

அமெரிக்காவில் கிராமி விருது நிகழ்ச்சியில் மகளுடன் பங்கேற்ற ஏ.ஆர். ரஹ்மான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலசில் கிராமி விருது நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகளுடன் பங்கேற்றார்.

இசைக் கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலசில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

தமது மகள் ரஹீமாவுடன் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் 86 வயதில் 28-வது கிராமி விருது பெற்ற குவின்சி ஜோன்சையும் ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

2010-ஆம் ஆண்டு ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் கிராமி விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. மெர்சல் ...

%d bloggers like this: