Home / உலகச் செய்திகள் / அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்-சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்-சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்யும் வகையிலான பாகிஸ்தான் ஊடக விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அபிநந்தனைப் போல மீசை வைத்து இந்திய அணியின் சீருடை போன்ற ஆடையை அணிந்தவர் மன்னிக்கவும் நான் அதுகுறித்து கூற முடியாது என மீண்டும் மீண்டும் கூறுவது போன்றும் டீ நன்றாக இருப்பதாகவும் கூறும் வகையில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

கையில் டீ கப்புடன் செல்லும் அவரை ஒருவர் தடுத்து நிறுத்தி கப்பை வைத்து விட்டுச் செல்லுங்கள் என கூறுகிறார்.

விமானம் குறித்த கேள்விகளுக்கு அபிநந்தன் மன்னிக்கவும் நான் அதுகுறித்து கூற முடியாது என்றும் டீ எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, நன்றாக இருக்கிறது என பதிலளித்ததை கிண்டல் செய்யும் வகையில் இந்த விளம்பரத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாகிஸ்தானால், டீ கப்பை மட்டுமே வெல்ல முடியும் என்பதை அவர்களே ஒத்துக் கொண்டிருப்பதாகவும், அந்த டீ கப்பையாவது, பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: