Home / சினிமா செய்திகள் / ‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் ?

‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் ?

ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்த படம். ஸ்ரீராம் ராகவன் ஒரு தமிழர். புனே திரைப்படக் கல்லூரியில் படித்து விட்டு பாலிவுட்டில் இயக்குனராக இருப்பவர்.

அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்தாதுன்’ படம், கடந்த ஆண்டில் பல திரைப்பட விருதுகளை வென்ற ஒரு படம். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கும் முயற்சியில் தனுஷ் ஈடுபட்டிருக்கிறாராம். இது சம்பந்தமாக அவர் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனையும் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

தனுஷ் கடந்த சில ஆண்டுகளாக ரீமேக் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அப்படி ‘அந்தாதுன்’ படத்தில் அவர் நடித்தால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் ஒரு ரீமேக் படமாக அது இருக்கும். ”அந்தாதுன் ஒரு விதிவிலக்கான கதை. அதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்,” என தனுஷ் தெரிவித்துள்ளாராம்.

ஹிந்திப் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவனே தமிழில் படத்தை இயக்குவாரா அல்லது வேறு ஒருவர் இயக்குவாரா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போது தெரிய வரும்

About இனியவன்

x

Check Also

‘என்.ஜி.கே.’ படத்தைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்

செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘என்.ஜி.கே.’ படத்தைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். செல்வராகவன் இயக்கத்தில் நேற்று (மே 31) வெளியான ...

%d bloggers like this: