Home / விளையாட்டுச் செய்திகள் / அதி சிறந்த வீர­ருக்­கான குளோப் சொக்கர் விருதை வென்­றெ­டுத்த ரொனால்டோ

அதி சிறந்த வீர­ருக்­கான குளோப் சொக்கர் விருதை வென்­றெ­டுத்த ரொனால்டோ

துபாயில் நடை­பெற்ற உலக கால்­பந்­தாட்ட விருது விழாவில் (குளோப் சொக்கர் அவோர்டஸ்) வருடத்தின் அதி சிறந்த வீர­ருக்­கான ஜுவென்டஸ் கழக வீரர் க்றிஸ்­டி­யானோ ரொனால்டோ வென்­றெ­டுத்தார்.

விளை­யாட்டு முக­வர்­க­ளுக்­கான ஐரோப்­பிய சங்கம், ஐரோப்­பிய கழக சங்கம் ஆகி­ய­வற்­றினால் ஏற்­பாடு செய்­யப்­படும் இவ் விருது விழாவில் க்றிஸ்­டி­யானோ ரொனால்டோ 6ஆவது தட­வை­யாக அதி சிறந்த வீர­ரூக்­கான விருதை வென்­றெ­டுத்தார்.

அத்­துடன் 2016 முதல் தொடர்ச்­சி­யாக நான்கு வரு­டங்கள் அதி சிறந்த வீர­ராக ரொனால்டோ தெரி­வா­கி­யுள்ளார்.

வரு­டத்தின் சிறந்த ஆற்றல் வெளிப்­பாட்டு வீர­ருக்­கான விருதை அத்­லெட்­டிகோ மெட்றிட் கழக வீரர் ஜொவாவோ பீலிக் தன­தாக்­கிக்­கொண்டார்.வரு­டத்தின் அதி சிறந்த வீராங்­கனை விருது லியொன் கழ­கத்தின் லூசி ப்ரொன்­ஸுக்கு வழங்­கப்­பட்­டது.

லிவர்பூல் கழக பயிற்­றுநர் ஜேர்ஜன் க்ளொப்­புக்கு அதி சிறந்த பயிற்­றுநர் விருது வழங்கப்பட்டதுடன் லிவர்பூல் கழகம் வருடத்தின் அதி சிறந்த கழகமாகத் தெரிவானது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை கிரிக்கெட் அணி ஸிம்பாப்வே பயணம் RADIOTAMIZHA

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் இவ் வருடம் தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை, முதலாவது வெற்றியை சுவைக்கும் நம்பிக்கையுடன் ஸிம்பாப்வே நோக்கி ...

%d bloggers like this: