Home / உலகச் செய்திகள் / அமெரிக்க அதிபர் மகள் இவாங்கோ ட்ரம்ப் உலக வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு

அமெரிக்க அதிபர் மகள் இவாங்கோ ட்ரம்ப் உலக வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு

உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் மகள் இவாங்கோ ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக வங்கியின் மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதாக மற்ற நாடுகள் குற்றச்சாட்டுகள் எழுப்பிவரும் நிலையில், உலக வங்கியின் தலைவர் ஜிம் கி யோங் திடீரென ராஜினாமா செய்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேலும் இதையடுத்து தற்காலிக தலைவராக தற்போது உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா நியமிக்கப்படுவதாகவும் உடனடியாக ஜிம் இடத்திற்கு ஒரு நிரந்தர தலைவரை அமர்த்தும் பணியைத் தொடங்க உள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உலக வங்கி தலைவர் பதவிக்கு இவாங்கோ ட்ரம்ப், ஐ.நாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

About அகமுகிலன்

x

Check Also

ஐக்கிய இராச்சியம், பர்மிங்ஹாம் பகுதியில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்!!

ஐக்கிய இராச்சியம், பர்மிங்ஹாம் பகுதியில் சுமார் ஐந்து பள்ளிவாசல்கள் மீது சுத்தியல் மற்றும் கற்கள் கொண்டு தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் ...

%d bloggers like this: