Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA |நிறம் மாறியது மெயில் ஒப்ருக் ஏரி

RADIOTAMIZHA |நிறம் மாறியது மெயில் ஒப்ருக் ஏரி

துருக்கியின் கொன்யா  நகரில் உள்ள மெயில் ஒப்ருக் ஏரி, குறைந்த நீர்மட்டம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக இளஞ்சிவப்பு நிறமாக (Pink) மாறியுள்ளது என்று கொன்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கல்வியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியின் வண்ண மாற்றத்துக்கு பாக்டீரியாக்களின் மிகப்பெரிய கட்டமைப்பே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோமீட்டர் விட்டமும் 40 மீட்டர் ஆழமும் கொண்ட ஏரியின் உப்பு நீரில் பாக்டீரியாக்கள் செழித்து வளர்வதால் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஏரியின் நீர் உப்புத்தன்மை வாய்ந்தது மற்றும் பாக்டீரியாவைத் தவிர வேறு எந்த உயிரினமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியின் நிறம் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளை பார்வையிட அழைக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About VITHUSHA

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...