Home / விளையாட்டுச் செய்திகள் / RADIOTAMIZHA | 8ஆவது மகளிர் இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி

RADIOTAMIZHA | 8ஆவது மகளிர் இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி

அவுஸ்­தி­ரே­லி­யாவில் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள 8ஆவது மகளிர் இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு முன்­னோ­டி­யாக சிட்னி, டரொங்கா ஸூவில் அணித் தலை­வி­களின் ஊடக சந்­திப்பு தினம் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

தலை­வி­களின் ஊடக சந்­திப்பு தின நிகழ்வில் ஓர் அம்­ச­மாக பத்து அணி­களின் தலை­வி­களும் மகளிர் இரு­பது 20 உலகக் கிண்­ணத்­துடன் உத்­தி­யோ­க­பூர்வ படம் எடுத்­துக்­கொண்­டனர். அத்துடன் இயற்கை காட்­சி­க­ளிலும் அவர்கள் படம் எடுத்­துக்­கொண்­டனர்.

மகளிர் இரு­பது 20 உலகக் கிண்­ணத்­துடன் அணி­களின் தலை­விகள் எடுத்­துக்­கொண்ட படத்தில் இட­மி­ருந்து வல­மாக சோர்­ணாரின் டிப்போச் (தாய்­லாந்து), ஸ்டெபானி டெய்லர் (மேற்­கிந்­தியத் தீவுகள்), ஹார்­மன்ப்ரீத் கோர் (இந்­தியா), சொபி டிவைன் (நியூ­ஸி­லாந்து), மெக் லெனிங் (அவுஸ்திரே­லியா), ஹீதர் நைட் (இங்­கி­லாந்து), சல்மா காத்துன் (பங்­க­ளாதேஷ்), சமரி அத்­தப்­பத்து (இலங்கை), பிஸ்மா மாறூவ் (பாகிஸ்தான்), டேன் வென் நிக்கேர்க் (தென் ஆபிரிக்கா) ஆகியோர் காணப்படுகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய ...

%d bloggers like this: