Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | 7.7 கோடி பார்வையாளர்களை பெற்று ராமாயணம் தொடர் உலக சாதனை

RADIOTAMIZHA | 7.7 கோடி பார்வையாளர்களை பெற்று ராமாயணம் தொடர் உலக சாதனை

ஊரடங்கு தொடங்கிய போது, தூர்தர்ஷனில் மீண்டும் ஒளிபரப்பப்பட்ட ராமாயணம் தொடர், ஏப்ரல் 16-ம் தேதி 7.7 கோடி பார்வையாளர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.

Image

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலால், பொழுதுபோக்கிற்காக தூர்தர்ஷனில் ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. ராமானந்த் சாகர் எழுதி, தயாரித்து, இயக்கிய இத்தொடர், முதலில் 1987-ம் ஆண்டு ஒளிபரப்பாகி, இந்திய மக்களை தொலைக்காட்சி முன் கட்டிப்போட்டது.

33 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இதனால் சரிந்திருந்த தூர்தர்ஷனின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. ஏப்ரல் 16-ம் தேதி, இத்தொடர் இதுவரையிலான உலக பார்வையாளர்கள் சாதனைகளை அடித்து நொறுக்கி 7.7 கோடி பார்வையாளர்களை பெற்றதாக தூர்தர்ஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இத்தொடரில் சீதா தேவியாக நடித்த தீபிகா சிக்லியா, கடந்த மாதம் ராமாயணத்தில் நடித்தவர்கள், வேலை பார்த்தவர்களின் குழு புகைப்படத்தை பதிவேற்றி, அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது உயிருடன் இல்லை. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியிருந்தார். அப்புகைப்படம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாக பரவியது. தற்போது ராமாயணம் தொடர் முடிவடைந்துவிட்டதால், தூர்தஷனின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 46 சதவீதம் சரிந்துள்ளதாக இந்திய ஒளிபரப்பு ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டுங்கள்:பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்

ரக்-ஷா பந்தன் தினத்தன்று பீஹார் மக்கள் மரங்களுக்கு ராக்கி கயிறு கட்ட வேண்டும் என அம்மாநில துணை முதல்வர் சுஷில் ...