Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதியுடன் பெண்ணொருவர் கைது

RADIOTAMIZHA | 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதியுடன் பெண்ணொருவர் கைது

கிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி- இரணைமடு விமானப்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, கிளிநொச்சி- புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி, குறித்த தகவலை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நேற்று 20 (வியாழக்கிழமை), கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பதில் கடமை பொறுப்பதிகாரி, சம்பிக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முரசுமோட்டை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அப்பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டது. பின்னர் வீட்டிலிருந்த குடும்பப்பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணை நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் அனுமதி கோரப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதி, கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரால் கொண்டுவரப்பட்டது எனவும் குறித்த சுற்றிவளைப்பின்போது அவர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Radio tamizha

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...