Home / விளையாட்டுச் செய்திகள் / RADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..!

RADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..!

2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த உலகக் கிண்ணப் போட்டி அடுத்த வருடம் பெப்ரவரி 06ஆம் திகதி முதல் மார்ச் 07ஆம் திகதி வரை நியூஸிலாந்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டிக்கு, ஏற்கனவே நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐ சி சி செம்பியன்ஷிப்பின் மூன்று தொடர்களில் பங்கெற்கவிருந்த அணிகளுக்கு புள்ளிகளை பகிர்ந்தளிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தொழில்நுட்பக்குழு முடிவு செய்துள்ளது.

இதற்கமைய, 23 புள்ளிகளுடன் ஐந்தாவது அணியாக இந்திய அணி 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | 8ஆவது மகளிர் இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி

அவுஸ்­தி­ரே­லி­யாவில் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள 8ஆவது மகளிர் இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு முன்­னோ­டி­யாக சிட்னி, டரொங்கா ...

%d bloggers like this: