Home / விளையாட்டுச் செய்திகள் / RADIOTAMIZHA | 2 ஆண்டு பிறகு களமிறங்கிய சானியா மிர்சா ஜோடி சாம்பியன்

RADIOTAMIZHA | 2 ஆண்டு பிறகு களமிறங்கிய சானியா மிர்சா ஜோடி சாம்பியன்

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். லீக் போட்டிகளில் எளிதாக வென்ற சானியா மிர்சா ஜோடி, நாக்அவுட் சுற்றுகளிலும் அசத்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், நேற்று (20) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சானியா மிர்சா-நாடியா ஜோடி, சீனாவின் சாங் ஷூவாய், பெங் ஷூவாய் ஜோடியை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா ஜோடி, 6-4, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய சானியா மிர்சா, தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சர்வதேச கிங்பொக்சிங்சில் சாதனை படைத்த வவு­னி­யா மாண­வர்­கள்

பாகிஸ்தான், லாகூர் பஞ்சாப் பல்­க­லைக்­க­ழக உள்­ளக அரங்கில் நடை­பெற்ற பாகிஸ்தான் இலங்கை சவேட் கிங்­பொக்சிங் பகி­ரங்க சர்­வ­தேச போட்­டியில் இலங்­கைக்கு ...

%d bloggers like this: