Home / தொழில்நுட்ப செய்திகள் / RADIOTAMIZHA | 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்த ஆப்பிள் நிறுவனம்

RADIOTAMIZHA | 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்த ஆப்பிள் நிறுவனம்

உலக அளவில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம்  2 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை பிடித்துள்ளது.

கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் (Counterpoint Research ) அமைப்பு 2019ம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை மதிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை 7 கோடியே 29 லட்சம் எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்து முதலிடத்திலும், தென்கொரியாவின் சாம்சங் 7 கோடியே 9 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்து 2ஆவது இடத்திலும், சீனாவின் ஹூவாய் ((Huawei)) 5 கோடியே 6 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்து 3ஆவது இடத்திலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.  குறைந்த விலை ஐபோன் 11 சீரிஸ்  போன்களை அதிகமாக ஏற்றுமதி செய்ததே  ஆப்பிள் முதலிடத்தை பிடிக்க காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

WhatsApp புதிய சாதனை RADIOTAMIZHA

வாட்ஸ் அப் செயலியில், புத்தாண்டு தினத்தையொட்டி, 10 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தகவல்கள் பரிமாரிக்கொள்ளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் ...

%d bloggers like this: