Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் வீழ்ச்சி

RADIOTAMIZHA | 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் வீழ்ச்சி

கொரோனா தாக்கத்தால் பொருளாதார வலிமை உள்ள நாடுகள் முடங்கியுள்ள நிலையில், கச்சா எண்ணெயின் விலை கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

இன்று பிரென்ட் கச்சா எண்ணெயில் விலை பேரலுக்கு 6 புள்ளி 6 சதவிகிதம் குறைந்து 23 புள்ளி 28 டாலராக வீழ்ச்சி அடைந்தது.

அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 20 டாலராக குறைந்தது. கொரோனா பாதிப்பால் எண்ணெய் தேவை குறைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான தொழில் போட்டியாலும் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த 16 ஆம் தேதி பேரலுக்கு 2 ஆயிரத்து 278 ரூபாய் என்று இருந்த இறக்குமதி விலை கடந்த வெள்ளி அன்று ஆயிரத்து 805 ரூபாயாக குறைந்தது. சர்வதேச விலை மீண்டும் குறைந்துள்ளதால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு கணிசமாக குறையும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...