Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வெள்ளத்தில் மூழ்கிய கேகாலை மாவட்டம்:இருவர் உயிரிழப்பு

RADIOTAMIZHA | வெள்ளத்தில் மூழ்கிய கேகாலை மாவட்டம்:இருவர் உயிரிழப்பு

நாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் வட்டார ஹெல பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு 48 வயதான ஒருவரும், வல்தெனிய பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 75 வயதான பெண் ஒருவர் மண்ணில் புதையுண்டும் உயிரிழந்துள்ளனர்.

வரக்காபொல உடுகும்புர பிரதேசத்தில் லொறி ஒன்று மண்சரிவு காரணமாக பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. மற்றும் அவிசாவளை – கண்டி பிரதான வீதி, கொட்டியாக்கும்புற, கன்னந்தோட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் களனி ஆற்றின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் களனி ஆற்றின் அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் புளத்கோபிட்டிய, தெரணியகலை, தெஹியோவிற்ற பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2016ஆம் ஆண்டு தெஹிவோவிற்ற டெனிஸ்வர்த் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் மூவர் பலியாகிய அதே இடத்தில் மீண்டும் கடந்த 15ஆம் திகதி மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்தப் பிரதேச மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

%d bloggers like this: