Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வெளிநாட்டு பயணிகளின் வீசா நீடிப்பு

RADIOTAMIZHA | வெளிநாட்டு பயணிகளின் வீசா நீடிப்பு

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் வீசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து வகையான வீசாக்களின் செல்லுபடியாகும் காலம்  மே மாதம் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக்  குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இலங்கையில்  தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் அனைத்து வகையான வீசாக்களின் செல்லுபடியாகும் காலத்தையும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை 30 நாட்களுக்கு அனைத்து வகையான வீசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவித்தலுக்கமைய, வீசா பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வீசா பிரிவுக்கு வருகைத் தருவதைத் தவிர்க்குமாறு குறித்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் எந்தவொரு அபராதமும் இன்றி விமான நிலையத்தில் வீசா கட்டணத்தை செலுத்துவதன் மூலம் நாட்டை விட்டு வெளியேற  முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே வீசா பெறுவதற்காக கடவுச்சீட்டுகளை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வீசா பிரிவுக்கு சமர்ப்பித்திருப்பவர்களுக்கு குறித்த திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பற்றுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் மே மாதம் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் மட்டும் கடவுச்சீட்டுகளை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு கடவுச்சீட்டுகளை பெற விரும்புபவர்கள் குறித்த பற்றுச்சீட்டினதும் விமான பயணச்சீட்டினதும் நிலற் பிரதிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள இணையத்தள முகவரிக்கு அனுப்பு வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வீசா தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும்  தேவையான அறிவுறுத்தல்களை  07 71 58 87 24  ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகளை பெற்றுக்கொள்ள முடியுமென குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

About இனியவன்

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...