Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வெசாக் நிகழ்வுகளை இரத்து செய்ய அரசு தீர்மானம்!

RADIOTAMIZHA | வெசாக் நிகழ்வுகளை இரத்து செய்ய அரசு தீர்மானம்!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு, இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் நிகழ்வுகளை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தசாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திரவை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வெசாக் தினத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பூஜைகளை வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமது வீடுகளில் நடத்தப்படும் மத நிகழ்வுகளுக்கு அயல் வீட்டார் அல்லது வெளிநாட்டவர்களை அழைக்க வேண்டாம் எனவும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான வெசாக் தினம் எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About Radio tamizha

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...