Home / ஆரோக்கியம் / RADIOTAMIZHA | வீட்டில் சுற்றி திரியும் பல்லிகளை விரட்டனுமா அப்போ இத படிங்க …
RADIOTAMIZHA |

RADIOTAMIZHA | வீட்டில் சுற்றி திரியும் பல்லிகளை விரட்டனுமா அப்போ இத படிங்க …

வீட்டில் எலிகளுக்கு அடுத்தப்படியாக அதிக பிரச்சனைகளை தருவது இந்த பல்லிகள் தான். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில், பல்லிகள் இருந்தால் அது தொல்லையாகவே இருக்கும்.

பிரிஞ்சு இலை: பிரிஞ்சி அல்லது பிரியாணியி;ல் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் தான் இந்த பிரிஞ்சு இலை. இந்த இலையை நெருப்பில் எரித்தால் கிளம்பும் புகையை, பல்லி இருக்கும் இடங்களில் பரவ விடுங்கள். பிறகு பல்லிகள் நடமாட்டம் அப்பகுதியில் இருக்காது.

கோழி முட்டை ஓடு: உடையாத கோழி முட்டை ஓடு இருந்தால், அதனை பல்லி சுற்றும் இடங்களில் ஆணி அடித்து அதன் மேல் முட்டை ஓட்டை வையுங்கள். நம் வீட்டில் கோழி வளர்ப்பதாக நினைத்து பல்லிகள் உள்ளே வராது. அது பல்லிக்கு அச்சமூட்டும் ஒரு பொருள்.

வெங்காயம்: வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த துண்டை, பல்லி உலாவும் இடங்களில் வைத்துவிடுங்கள். அப்போது, பல்லியின் தொந்தரவு குறையும். மேலும், வெங்காய சாற்றை அப்பகுதியி;ல் தெளித்தாலும் பல்லி வராது.

பூண்டு: பூண்டு பற்கள் பல்லிக்கு ஆகாவே ஆகாத பொருட்களில் ஒன்று. எனவே அவற்றை பல்லி எப்போதும் திரியும் இடங்களில் வைத்து விட்டால், அந்த இடத்தில் இருந்து பல்லி காணாமல் போய்விடும்.

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA | நாயுருவி செடியின் அற்புத மருத்துவ பயன்கள்

நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ ...