Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வியாபார நிலையங்கள் உடைத்து திருட்டு!!

RADIOTAMIZHA | வியாபார நிலையங்கள் உடைத்து திருட்டு!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள நான்கு வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் இன்று 07ம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு வேளையில் ஓட்டமாவடி தபால் நிலைய வீதியிலுள்ள சில்லறை வியாபார நிலையம், ஓயில் வியாபார நிலையம் என்பவற்றினை உடைத்து சில்லறை பொருட்கள் மற்றும் ஓயில் வகைகள், பணம் என்பவற்றுடன் வியாபார நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமராவினை உடைத்து அதன் உதிரிப்பாகங்களையும் திருடிச் சென்றுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று ஊரடங்குச் சட்டம் இரண்டு மணியளவில் அமுல்ப்படுத்தப்பட்ட போது வியாபாராத்தினை முடித்து விட்டு உரிமையாளர்கள் வீடு சென்றதாகவும், இன்று காலை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நடமாடும் வகையில் வியாபாரம் செய்வதற்கு வியாபார நிலையத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட போது வியாபார நிலையம் உடைக்கட்டிருந்ததையடுத்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...