Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | விசேட அதிரடிப் படையினரால் கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு!!

RADIOTAMIZHA | விசேட அதிரடிப் படையினரால் கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு!!

செங்கலடி – சித்தாண்டி, சந்தணமடு காட்டுப் பகுதியில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், கசிப்பு கொள்கலனும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இவற்றை வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர் இன்று கைப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் எட்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் விசேட சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் அடிப்படையிலேயே கஞ்சா தோட்டம் மற்றும் கசிப்பு கொள்கலன் என்பன வெவ்வேறு இடங்களில் சிக்கியுள்ளன.

அத்தோடு சந்தணமடு காட்டுப் பகுதியில் பதினாறு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டுள்ள நிலையில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், கசிப்பு தயாரிப்பிற்கான ஆரம்ப நடவடிக்கை மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்ட 210 லீற்றர் கசிப்பு அடங்கிய கொள்கலனும் மற்றொரு இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...