Home / தொழில்நுட்ப செய்திகள் / RADIOTAMIZHA | வாட்ஸ் ஆப் செயலியின் சேவை முடங்கியமைக்காக பயனர்களிடம் வருத்தம் தெரிவிப்பு

RADIOTAMIZHA | வாட்ஸ் ஆப் செயலியின் சேவை முடங்கியமைக்காக பயனர்களிடம் வருத்தம் தெரிவிப்பு

வாட்ஸ் ஆப் செயலியின் சேவை நேற்று சில மணி நேரம் முடங்கியமைக்காக பயனர்களிடம் அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் ஆப்பின் சேவை, நேற்று மாலையில் திடீரென முடங்கியது. இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் சேவை துண்டிக்கப்பட்டதால், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்களை பரிமாற முடியாமல் பயனர்கள் கடும் திண்டாட்டத்திற்கு ஆளாகினர்.

சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் நிலைமை சரிசெய்யப்பட்டு, மீண்டும் சேவை வழங்கப்பட்டது. இந்நிலையில் சேவை துண்டிப்பால் தனது பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

WhatsApp புதிய சாதனை RADIOTAMIZHA

வாட்ஸ் அப் செயலியில், புத்தாண்டு தினத்தையொட்டி, 10 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தகவல்கள் பரிமாரிக்கொள்ளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் ...

%d bloggers like this: