Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீடுகளுக்கு விநியோகம்

RADIOTAMIZHA | வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீடுகளுக்கு விநியோகம்

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகளை தபால் நிலையங்களில் கையளிக்கும் நடவடிக்கை இன்றும், நாளையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினூடாக, பிரதேச தபால் அதிகாரிகளிடம் வாக்காளர் அட்டைகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19 மற்றும் 26 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த தினங்களில் மக்கள் வீடுகளிலிருந்து தமக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி 5803 2458% ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4700 19.91% அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4158 ...