Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனோ இல்லை

RADIOTAMIZHA | வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனோ இல்லை

வவுனியாவில் நேற்றையதினம் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த பெண் மரணமடைந்திருந்தார்.

அதேவேளை குறித்த பெண் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...