Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வவுனியாவில் இடம்பெற்ற விபத்து:ஒருவர் உயிரிழப்பு

RADIOTAMIZHA | வவுனியாவில் இடம்பெற்ற விபத்து:ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதியவர் பயணமொன்று செல்வதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் வவுனியா புதிய பேருந்து நிலைய பகுதிக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு தரித்துநின்ற இலங்கை போக்குவரத்து சபையின் மாகோசாலைக்கு சொந்தமான பேருந்து பின்னோக்கி நகர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்தின் பின்னால் நின்றிருந்த முதியவர் மீது மோதியது.

இதனையடுத்து படுகாயமடைந்த முதியவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About Radio tamizha

x

Check Also

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 125 பேர் கைது!

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ...