Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

RADIOTAMIZHA | வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாவாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை,திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...