Home / கட்டுரைகள் / RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று மார்ச் 22

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று மார்ச் 22

மார்ச் 22 ( March 22 )

நிகழ்வுகள்.

1622 – வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347
ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.
1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா ,
பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன.
1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.
1895 – முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.
1939 – இரண்டாம் உலகப் போர் : ஜெர்மனி
லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.
1943 – இரண்டாம் உலகப் போர் : பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஆதிக்கவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
1945 – அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது.
1960 – ஆர்தர் ஷாவ்லொவ் , மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.
1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.
1993 – இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது.
1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி
பூமிக்குக் கிட்டவாக வந்தது.
2004 – ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அஹமது யாசின் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2006 – பாஸ்க் ஆயுதக்குழு ஈடிஏ காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது.

பிறப்புகள்

1394 – உலுக் பெக் , பாரசீக வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1449 )
1799 – பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர் , செருமானிய வானியலாளர் (இ. 1879 )
1868 – இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் ,
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1953 )
1869 – எமிலியோ அகுயினால்டோ , பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ.
1964 )
1873 – யூலியெத்தா லாந்தேரி , இத்தாலிய-அர்கெந்தீன மருத்துவர், பெண்ணியவாதி (இ. 1932 )
1877 – தி. வே. சுந்தரம் , தமிழகத் தொழிலதிபர் (இ. 1955 )
1894 – சூரியா சென் , இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (இ. 1934 )
1909 – நேதன் ரோசென் , இசுரேலிய இயற்பியலாளர் (இ. 1995 )
1938 – கோவை மகேசன் , இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 1992 )
1942 – ஷீலா , தென்னிந்திய நடிகை
1955 – சொ. கருப்பசாமி , தமிழக அரசியல்வாதி (இ. 2011 )
1964 – உ. சகாயம், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, செயற்பாட்டாளர்
1976 – ரீஸ் விதர்ஸ்பூன் , அமெரிக்க நடிகை

இறப்புகள்

1627 – பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.
1832 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா , செருமானிய புதின எழுத்தாளர் (பி. 1749 )
1896 – தோமஸ் ஹியூக்ஸ் , ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1822 )
1952 – டி. எஸ். சேனநாயக்கா , இலங்கையின் 1வது பிரதமர் (பி. 1884 )
1977 – ஏ. கே. கோபாலன் , இந்தியக் கல்வியலாளர், அரசியல்வாதி (பி. 1904 )
2004 – அகமது யாசின் , பாலத்தீனத் தலைவர் (பி. 1937 )
2005 – ஜெமினி கணேசன் , தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1920 )
2007 – பார்துமான் சிங் பிரார் , இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (பி. 1927 )
2016 – ராப் ஃபோர்ட் , கனடிய அரசியல்வாதி (பி. 1969 )

சிறப்பு நாள்

உலக நீர் நாள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று மார்ச் 24

நிகழ்வுகள் 1878 – பிரித்தானியக் கப்பல் HMS யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர். 1882 – காசநோயை உருவாக்கும் ...

%d bloggers like this: