Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டுங்கள்:பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்

RADIOTAMIZHA | மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டுங்கள்:பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்

ரக்-ஷா பந்தன் தினத்தன்று பீஹார் மக்கள் மரங்களுக்கு ராக்கி கயிறு கட்ட வேண்டும் என அம்மாநில துணை முதல்வர் சுஷில் குமார்

சகோதரத்துவத்தை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ரக்-ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதர – சகோதரிகள் வலுப்படுத்தும் விதமாகவும் அன்பை பரிமாறிக் கொள்ளவும் ஒருவருக்கொருவர் ‛ராக்கி’ கயிறு கட்டி மகிழும் இந்த நாள் இன்று (ஆக.,03) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பீஹார் துணை முதல்வரான சுஷில் குமார் மோடி அம்மாநில மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையை கவனித்துவரும் அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ராக்கியை மரங்களுடன் கட்டுவதற்கு பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு ரக்-ஷா பந்தனில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய முடியாது. அதனால் ரக்-ஷா பந்தன் தினத்தன்று பீஹார் மக்கள், தங்கள் வளாகத்திலும் அருகிலுள்ள மரங்களிலும் ராக்கி கட்டி மரங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுங்கள். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, ஆக.,09ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் 2.51 கோடி மரக்கன்றுகளை நடவு செய்வதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, தோட்டக்கலை இயக்கம் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பே மரக்கன்றுகள் நடத்தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

About Radio tamizha

x

Check Also

கொரோனா விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று

பொது மக்களிடையே கொரோனா மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான புதிய பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து மத்திய அரசு இன்று (செவ்வாய்கிழமை) ...