Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழ். தாவடி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற தடை விதிப்பு!!

RADIOTAMIZHA | யாழ். தாவடி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற தடை விதிப்பு!!

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் தாவடி கிராமத்தில் வசிக்கும் மக்களை மீண்டும் அறிவிக்கப்படும் வரை கிராமத்தை விட்டோ அல்லது வீடுகளை விட்டோ வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டதும், அண்மையில் சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த போதகர் நடத்திய பிரார்த்தனையில் கலந்துக்கொண்ட அதிகமான மக்கள் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தாவடி கிராமத்திற்குள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டு கிராமத்திற்கான அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளதுடன், இராணுவம் தற்காலிக காவலரணை அமைத்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் யாழ். அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மக்களின் பாதுகாப்பு மற்றும் நோய் பரவலை தடுக்க முகமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் மாத்திரம் யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

ரஞ்சனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை எதிர்வரும் நவம்பர் ...