Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுப்பு!!

RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுப்பு!!

யாழ்ப்பாணம் அரியாலையில் வசிக்கும் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அரியாலை பூம்புகார் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று 3ம் திகதி காலை முன்னெடுக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர். கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள பூம்புகார் கிராமத்தில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற 18 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...