Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது

RADIOTAMIZHA | யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வர் இதனை எமது கெப்பிட்டல் செய்திக்கு தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார  அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருணாகலை ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த மூன்று கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

About இனியவன்

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...