Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழில் வீட்டு வாசலுக்கே ஏ.டி.எம் இயந்திரத்தை கொண்டு வரும் அரச வங்கி

RADIOTAMIZHA | யாழில் வீட்டு வாசலுக்கே ஏ.டி.எம் இயந்திரத்தை கொண்டு வரும் அரச வங்கி

இலங்கை முழுவதும் பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு சில மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட போதும் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த அபாய வலயங்களுக்குள் யாழ் மாவட்டமும் அடங்குகிறது.

இதனால் யாழில் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றிக்கொள்ள மக்கள் பெரும் சிரமங்களை நோக்கி வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் வங்கியில் பணம் எடுப்பதும் மக்களது அத்தியாவசிய தேவையாக உள்ளது. எனினும் வங்கிகள் மூடப்பட்டுள்ளதால் ஏ.டி.எம் இயந்திரத்தையே மக்கள் நாடுகின்றனர்.

ஊரடங்கு வேளைகளில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுப்பதும் சிக்கலான ஒன்றாக காணப்படுகிறது .

இதை நிவர்த்தி செய்யும் வகையில் வங்கி ஒன்று முன்வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டு வாசலுக்கே ஏ.டி.எம் இயந்திரத்தை கொண்டு வருகின்றது

இந்த வங்கி யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று மக்களுக்கு தமது சேவையை வழங்குகிறது.

மக்களும் இதன்மூலம் அதிக பயனடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. வரிசையில் நின்று பணம் எடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

நேற்று ஆரம்பித்த இந்த சேவை இம்மாதம் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட உள்ளது.

அந்த வகையில் குறித்த 10 தினங்களுக்கும் வரும் இடங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

No photo description available.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...