Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | முல்லைத்தீவு பகுதியில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

RADIOTAMIZHA | முல்லைத்தீவு பகுதியில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

முல்லைத்தீவு பகுதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பில்  தெரியவருகையில்,

முல்லைத்தீவு விசுவமடு-தேராவில் பகுதியில், கயஸ் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே விபத்து இடம்பெற்றது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளை பொருட்களைக் கொள்வனவு செய்து திரும்பியவர்களே விபத்திற்குள்ளாகியுள்ளனர் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்துக் குறித்த புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வேட்பாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளுக்காக தனது நிழற்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். ...

%d bloggers like this: