Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | முகக்கவசங்கள் அணிவதன் மூலம் கொரோனாவை அழிக்க முடியாது-உலக சுகாதார அமைப்பு

RADIOTAMIZHA | முகக்கவசங்கள் அணிவதன் மூலம் கொரோனாவை அழிக்க முடியாது-உலக சுகாதார அமைப்பு

முகக்கவசங்கள் அணிவதன் ஊடாக மாத்திரம் கொவிட் 19 வைரஸ் தொற்றை அழிக்க முடியாது எனவும், அது வைரஸை அழிப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்லவெனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அடிக்கடி கைகளை கழுவ முடியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் இடைவெளியை பேண முடியாதவர்களுக்கே கட்டாயமாக முகக்கவசங்கள் அவசியமாகின்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெடோஸ் எடனம் கிரேபியஸ் குறிப்பிட்டார்.

மேலும் போதிய நீர் இல்லாதவர்கள் மற்றும் சன நெரிசலை தவிர்க்க முடியாதவர்களுக்கு முகக்கவசங்களின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது, சுகாதார ஊழியர்களுக்கு முகமூடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகளின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...