Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுடன் இருவர் கைது!!

RADIOTAMIZHA | மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுடன் இருவர் கைது!!

01ம் திகதி குச்சவேலி பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட இரண்டு நபர்கள்கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு, குச்சவேலி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று சோதனை செய்ததுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடமிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் ஜெலிக்னைட் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நான்கு (04) சார்ஜர்கள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் குறித்த நபர்கள், வெடிபொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் கடற்படையால் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 37 வயதுடை குச்சவேலி வடலிகுளம் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும் சந்தேக நபர்கள் வெடிபொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...