Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்: மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை

RADIOTAMIZHA | மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்: மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

யானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.

அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை ...