Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மின்சாரசபை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட ஆடை

RADIOTAMIZHA | மின்சாரசபை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட ஆடை

கொரோன தொற்றிலிருந்து இலங்கை மின்சார சபை சேவையாளர்கள் ,ஊழியர்களைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு ஆடையை இலங்கைமின்சார சபையின் ஹட்டன் காரியலயத்தில் இன்று காலை 2ம் திகதி அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

மின்சார வேவையாளர்கள் மின்சார அவசர தேவை நேரங்களில் பொதுமக்கள் நிறைந்த பகுதிகளுக்கு செல்கிற போது அவர்களுக்கான பாதுகாப்பு கருதியே மேற்படி ஆடை தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் கடமை நிமித்தம் வெளியில் சென்று திரும்பும் மின்சாரசபை சேவையாளர்களை தொற்று நீக்கி கிருமிநாசினி தெளித்து உள்வாங்குவதுடன் அவர்கள் பயணித்த வாகனத்திற்கும் தொற்று நீக்கி கிருமிநாசினி தெளித்து பாதுகப்பை உறுதிபடுத்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...