Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மஹிந்தவின் அபார வெற்றி! வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி

RADIOTAMIZHA | மஹிந்தவின் அபார வெற்றி! வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி

நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் பெறுபேறுகள் தற்சமயம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளதாக, தற்போது வெளியான பெறுபேறுகளுக்கு உறுதியாகி உள்ளது.

இதனையடுத்த அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் அவரின் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாடங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை வெளியாக பெறுபேறுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 27 இலட்சத்த 25 ஆயிரத்து 197 வாக்குகளை பெற்றுள்ளது.

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 9 இலட்சத்து 46 ஆயிரத்து 924 வாக்குகளை பெற்றுள்ளது.

அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 1 இலட்சத்து 88 ஆயிரத்து 028 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 1 இலட்சத்து 47 ஆயிரத்து 991 வாக்குகளை பெற்றுள்ளது.

இதேவேளை பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளதாக தெரிய வருகிறது.

About இனியவன்

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...