Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

RADIOTAMIZHA | மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

நாட்டில் தேவைக்கேற்றளவு போதுமான அளவு மருந்துப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் பொது மக்கள் தேவையற்ற குழப்ப நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும்; சங்கம் தெரிவித்துள்ளது.

தட்டுப்பாடு இன்றி, தொடர்ச்சியாக மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான மருந்துகளை களஞ்சியப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேவைக்கு அதிகமான மருந்துகளை வைத்திருப்பதன் மூலம் அதன் தரம் குறைவடைவதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...