Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மரக்கறி சந்தை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை திறந்திருக்க தீர்மானம்!

RADIOTAMIZHA | மரக்கறி சந்தை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை திறந்திருக்க தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பு மரக்கறி சந்தை (மெனிங்) அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நுகர்வோர் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும் என்று மரக்கறி பொது சந்தை சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் 15 பாரவுவூர்திகளில் மரக்கறிகள் கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.

மேலும்  கொரோனா வைரஸ் தொற்றானது பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறிய 2682 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 420 பேர் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு 97 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

யானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.

அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை ...