Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மன்னாரில் இடம்பெற்ற வாகன விபத்து-ஒருவர் காயம்

RADIOTAMIZHA | மன்னாரில் இடம்பெற்ற வாகன விபத்து-ஒருவர் காயம்

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கழிவு மீன்களை ஏற்றிச் சென்ற குளிரூட்டி வாகனம் (cooler) ஒன்றே இன்று (21) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழில் இருந்து நேற்று இரவு மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு மன்னார் நோக்கி குறித்த குளிரூட்டி வாகனம் மன்னார் பிரதான பாலத்தினை அண்மித்த வேளை , வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகாமையில் காணப்பட்ட சுமார் 5 தடைகளை உடைத்து வீதியை வீட்டு விலகி, மீண்டும் வந்த திசையை நோக்கி குடைசாய்ந்துள்ளது.

இந்த விபத்தின் போது காயமடைந்த வாகனத்தின் சாரதி உடனடியாக மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சற்று முன் இடம்பெற்ற விபத்து: ஐவர் பலி பலர் காயம் புகைப்படங்கள் உள்ளே

சற்று முன் (இரவு 8.20) வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் ...

%d bloggers like this: