Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மதுபான விற்பனை நிலையங்களுக்கு பொலிஸார் சீல் வைப்பு!!

RADIOTAMIZHA | மதுபான விற்பனை நிலையங்களுக்கு பொலிஸார் சீல் வைப்பு!!

தலவாகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாகலை மற்றும் வட்டகொடைபிரதேசத்திலுள்ள மதுபானம் விற்பனை நிலையங்கள் பொலிஸாரினால் இன்று 7ம் திகதி சீல் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொறிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுமான விற்பனை நிலையங்களுக்கு மறு அறிவித்தல் வரை மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொது மக்களின் அத்தியாவசிய பொருட்கொள்வனவிற்கு கட்டம் கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்படி மதுபான விற்னை நிலைய உரிமையாளர்கள் மதுபான விற்பனை நிலைத்தை திறந்து மதுபான போத்தல்களை எடுத்து தோட்டப் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே மறு அறிவித்தல் வரை மேற்குறித்த எட்டு மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...