Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மதுபானசாலை உடைத்து வெளிநாட்டு மதுபானங்கள் கொள்ளை

RADIOTAMIZHA | மதுபானசாலை உடைத்து வெளிநாட்டு மதுபானங்கள் கொள்ளை

ஹட்டன் புளியாவத்தை பகுதியில் மதுபானசாலை ஒன்றை உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது

இந்த சம்பவம் நேற்றைய தினம் அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காவல் துறை ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ள நிலையில், மதுபான சாலைககள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே குறித்த மதுபானசாலை உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...