Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தல்

RADIOTAMIZHA | மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் எம்.அச்சுதன் இன்று (3) காலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

இதன்படி வெளிநாடுகளில் வேலைகளுக்காக சென்று திரும்பிய 1011 பேர்களும் அத்தோடு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைகள் நிமிர்த்தமாகவும் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தவர்களுமாக 1351 பேருடன் மொத்தம் 2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர்களுக்கு ஏதாவது அசாதாரணமான உடல் நிலைகாணப்பட்டால் உடனடியாக தொடர் மருத்துவ நடவடிக்கை எடுப்பதற்கு போதனா வைத்தியசாலை தயாராகவுள்ளதாக போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் இன்னும் 96 படுக்கைகளை கொண்ட விடுதி ஒன்று மூன்று வாரங்களில் தயார்ப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோய் சந்தேக நபர்களாக 36 நபர்கள் இது வரை அனுமதிக்கப்பட்டு அதில் தனிமைப்படுத்தலுக்காக 5 பேர் அனுப்பப்பட்டனர். ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுத்திப்படுத்தப்பட்டு கொழும்பு தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது. – என்றார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...