Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | மட்டக்களப்பில் இரண்டு கட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

RADIOTAMIZHA | மட்டக்களப்பில் இரண்டு கட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – கொக்குக்குஞ்சிமடு பிரதேசத்தில் இரண்டு கட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கரடியனாறு பொலிஸாரினால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ சமரகோன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இத்துப்பாக்கிகள் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி ஜயசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட போதையொழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிஜி.ஜயலத் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் ஜயரத்ன, பொலிஸ் கான்ஸ்டபிள்களான சுனில் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு இலவச காப்புறுதி

அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கiயில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டத்தை இலங்கை ...

%d bloggers like this: