Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பொருட்களின் இறக்குமதி தொடர்பில் பந்துல விடுத்துள்ள அறிவித்தல்!!

RADIOTAMIZHA | பொருட்களின் இறக்குமதி தொடர்பில் பந்துல விடுத்துள்ள அறிவித்தல்!!

அத்தியாவசியம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களின் இறக்குமதிகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியானதாக தகவல் உண்மைக்கு புறம்பானது என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்; பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று 3ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேசம் பாரியதொரு பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளுக்கும் எல்லா நாடுகளிலும் பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

ஆகவே அத்தியாசிய பொருட்கள் அற்ற ஏனைய பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் வாகனங்கள் மற்றும் பிளாஸ்டிக் ஆகிய பொருட்களும் அடங்குகின்றன.

எவ்வாறாயினும் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், உரம், இரசாயண திரவங்கள் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை.

ஆகவே அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்து ஏனைய அனைத்து பொருட்களினதும் இறக்குமதிக்கு தடைவிதிப்பதாக தெரிவிப்பது உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...