Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பேக்கரி உற்பத்திகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

RADIOTAMIZHA | பேக்கரி உற்பத்திகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தற்போது கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன எனவும் அவை அனைத்தையும் நம்பி பொது மக்கள் குழப்பமடையவோ அச்சமடையவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகள் ஊடாக கொரோனா வைரஸ் பரவும் என கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் கிடையாது என கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையின் விஷேட மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம விளக்கமளித்துள்ளார்.

ஆனால், பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்யும் நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தால் அவற்றை வாங்குவோருக்கு வைரஸ் பரவும் அச்சம் இருப்பதால் விற்கும் நபர்கள் கையுரைகளைப் பாவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயல்பாடுகளையும் பொது மக்களும் உற்பத்தியாளர்களும் பின்பற்றி நடக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...

%d bloggers like this: