Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு இடம்­பெற்­ற தேயிலைக் கொழுந்து பறிக்கும் போட்­டி

RADIOTAMIZHA | பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு இடம்­பெற்­ற தேயிலைக் கொழுந்து பறிக்கும் போட்­டி

ஹேலிஸ் நிறு­வ­னத்தின் கீழ் இயங்கும் கள­னி­வெளி, தல­வாக்­கலை மற்றும் ஹொரணை ஆகிய பெருந்­தோட்ட நிறு­வ­னங்­களின் கீழ் பணி­பு­ரியும் தொழி­லா­ளர்­க­ளுக்­கான தேயிலைக் கொழுந்து பறிக்கும் போட்­டியின் இறு­திப்­போட்டி ஹேலிஸ் நிறு­வ­னத்தின் ஏற்­பாட்டில் நானு­ஓயா ரதாலை விளை­யாட்டு மைதா­னத்தில் சனிக்­கி­ழமை காலை இடம்­பெற்­றது.

இதன்­போது, ஹேலிஸ் நிறு­வ­னத்தின் தலைவர் மொஹான் பண்­டி­தகே, ஹேலிஸ்   நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பாளர் ரொஷான் இரா­ஜ­துரை ஆகியோர் பிர­தம அதி­தி­க­ளாக கலந்து கொண்­டனர்.

தேயிலை ஆராய்ச்சி நிலை­யத்தின் ஆய்­வா­ளர்­க­ளான  கலா­நிதி மொஹட்டி மற்றும் பி. ஏ. டி. சமன்­சிறி  மற்றும் தோட்ட முகா­மை­யா­ளர்கள் நிறு­வ­னத்தின் உயர் அதி­கா­ரிகள், பெருந்­தோட்ட மனி­த­வள அபி­வி­ருத்தி நிறு­வ­னத்தின் தலைவர், உத்­தி­யோ­கத்­தர்கள் என பலரும் கலந்து கொண்­டனர்.

அதி­திகள் மரக்­கன்று ஒன்றை நாட்டி வைத்­ததை தொடர்ந்து தேயிலைக் கொழுந்து பறிக்கும் போட்டி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. போட்­டிக்கு 20 நிமி­டங்கள் மாத்­திரம் வழங்­கப்­பட்ட அதே­வேளை தேயிலைக் கொழுந்தை தெரிவு செய்­வ­தற்கு 10 நிமி­டங்கள் வழங்­கப்­பட்­டன. இறுதிப் போட்­டிக்கு தெரி­வான 39 போட்­டி­யா­ளர்கள் இதில் கலந்­து­கொண்­டனர்.

இப்­போட்­டியில் தல­வாக்­கலை பெருந்­தோட்ட நிறு­வ­னத்தின் கீழ் இயங்கும் தல­வாக்­கலை பேயாவல் தோட்­டத்தைச் சேர்ந்த பழ­னி­செல்வி 88. 63 புள்­ளி­களைப் பெற்று முதலாம் இடத்தை தன­தாக்கிக் கொண்டார்.

கள­னி­வெளி பெருந்­தோட்ட நிறு­வ­னத்தின் பொக­வந்­த­லாவ ரொப்கில் தோட்­டத்தைச் சேர்ந்த கம­லேஸ்­வரி 82 புள்­ளி­களைப் பெற்று இரண்டாம் இடத்­தையும் ஹொரணை பெருந்­தோட்ட நிறு­வ­னத்தின் லிந்­துலை பம்­ப­ர­கலை தோட்­டத்தைச் சேர்ந்த பென­டிக்­மேரி 80.58 புள்­ளி­களை பெற்று மூன்றாம் இடத்­தையும் தன­தாக்கிக் கொண்­டனர்.

இப்­போட்­டியில் கலந்­து­கொண்டு முதல் மூன்று இடங்­களைப் பெற்­றுக்­கொண்ட போட்­டி­யா­ளர்­க­ளுக்கு ஹேலிஸ் நிறு­வ­னத்தின் தலைவர் மொஹான் மற்றும் முகா­மைத்­துவ பணிப்­பாளர் ரொஷான் ராஜ­துரை ஆகி­யோ­ரினால் பதக்­கங்­களும் சான்­றி­தழ்­களும் வழங்­கப்­பட்­டன, அதே­வேளை வெற்­றி­யா­ளர்கள் மூவ­ருக்கும் தமது குடும்­பத்­தி­ன­ருடன் இந்­தியா சென்று வரு­வ­தற்­கான வாய்ப்பும் நிறு­வ­னத்­தினால் வழங்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சற்று முன் இடம்பெற்ற விபத்து: ஐவர் பலி பலர் காயம் புகைப்படங்கள் உள்ளே

சற்று முன் (இரவு 8.20) வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் ...

%d bloggers like this: