Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் மக்களிடம் கையளிப்பு!

RADIOTAMIZHA | புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் மக்களிடம் கையளிப்பு!

யாழ்ப்பாணம் – இருபாலை தெற்கு ஞான வைரவர் கோயிலடி பிரதேச மக்களுக்காக 25 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் இன்று (31) அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

ஞான வைரவர் கோயிலடி கிராம மக்கள் குடிநீரைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் இந்த மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறித்த பிரதேச சபை உறுப்பினர் ந.கஜேந்திரகுமாரின் முயற்சியினால் சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக் குடிநீர் திட்டம் அமைகப்பட்டது.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் கே கே பி இளைஞர் கழகத்தின் மூலம் வாழ்வாதார உதவிகள்

எமது கழகத்தின் #தொடர்_நிதி வழங்குணரும் சமூக சேவையாளருமான #திரு_ஜது அவர்கள் வழங்கிய நிதிப் பங்களிப்பு உதவியின் மூலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை ...